பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

சாலை’ (Porto Novo Iron Company) என்ற ஒன்றைத் துவக்கினார்.

கி.பி. 1858 இல் ‘கிழக்கிந்திய இரும்புத் தொழிற்சாலையும் ஏற்படுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள இரும்புத்தாது தோண்டி எடுக்கப்பட்டது. காவிரிக் கரையிலுள்ள பூலாம் பட்டியில் இரும்புருக்கும் உலைகள் ஏற்படுத்தப் பட்டன. கஞ்ச மலையினின்றும் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புத்தாது 23 கல் தொலைவிலுள்ள பூலாம்பட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவ்வுலைகளில் பிரித்தெடுக்கப்பட்ட இரும்பு மிகவும் உயர்ந்த ரகமானது. துளைப் பாலங் (Tubular bridge) களும், வளைந்து கொடுக்கும் பாலங்களும் (Suspension bridge) அமைக்க அவ்விரும்பு மிகவும் ஏற்றதாக இருந்தது. பூலாம்பட்டி உலைக்கு வேண்டிய கரி (Charcoal) காவிரிக்கப்பால் 18 கல் தொலைவிலுள்ள சோழப்பாடியிலிருந்து பெறப்பட்டது. அவ்விடத்தில் கரியானது நிறைந்த அளவில் அவிக்கப்பட்டுக் காவிரியாற்றின் மூலம் படகுகளில் பூலாம் பட்டிக்கு அனுப்பப்பட்டது. ஒருடன்கரி ரூ 6 க்குப் பெறப்பட்டது. ஆனால் ஒழுங்கான முறையில் கிடைக்கவில்லை. சோழப்பாடியில் கரி அவிக்கும் தொழிலாளர்களுக்குக் காட்டின் தட்ப வெப்ப நிலை ஒத்து வராத காரணத்தால், அடிக்கடி அவர்கள் நோய்வாய்ப்பட்டனர். அதனால் உலைவேலையும் தடைப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சேலம் மாவட்டத்திலுள்ள இரும்புத்தாதுப் படிவங்கள் விரிவான முறையில் வாணிப நோக்கோடு ஆராயப்பட்டன. புதுவிதமான பேருலை (blast furnaces) களை நிறுவி இத்தொழிலை வருவாயுடையதாக ஆக்குவதற்குரிய வழிவகைகளையும் புள்ளிவிவரங்களையும் ஆய்ந்தனர். ஒருடன் இரும்பு உருவாவதற்கு 3 1/2 டன் கரி தேவைப்படும் என்று கணக்கிட்டனர். இவர்களுடைய