பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66



“… … … வெறுக்கைநன் குடையன்
ஆரங் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்
சார லருவிப் பயமலைக் கிழவன்”
(புறநா. 152)

என்றும்,

“ … … … வேட்டத்தில்
தானுயிர் செகுத்த மானினப் புழுக்கொடு
ஆனுருக் கன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவி னன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச்
சுரத்திடை நல்கியோனே விடர்ச்சிமை
ஓங்கிருங் கொல்லிப் பெருநன்”
(புறநா. 152)

என்றும்,

“மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
இழையணி யானை இரப்போர்க் கீயும்
… … … …
அடுபோர் ஆனா ஆதன் ஓரி ”
(புறநா. 153)

என்றும்,

“பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வானார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர்.
(புறநா. 153)

என்றும் பாடி மகிழ்கிறார்.


மற்றாெரு செந்நாப் புலவரான கழைதின் யானை யார்,

“கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ....”

(புறநா. 204)

என்று புகழ்ந்து பாடுகிறார்.


“அடுபோர்ஆனா ஆதன் ஓரி” என்ற புறநானூற்றடியிலிருந்து, இவன் இயற்பெயர் ‘ஆதன்’ என்பதூஉம், குடிப் பெயர் ‘ஓரி’ என்பதூஉம் புலனாம். கொல்லி மலை ஓரிக்குரியதென்பது, “கொல்லியாண்ட வல்வில்