பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

அஞ்சூர் மலையாளிகள் பயில், திருப்புலி, எடப்புலி, பிறகரை, சித்தூர் நாடுகளில் 7000 பேர் வாழ்கின்றனர். மூனூர் மலையாளிகள் குண்டுனி, அலத்தூர், பலாப்பாடி நாடுகளில் 1500 பேர் வாழ்கின்றனர். அஞ்சூர் மலையாளிகள் பயில் நாட்டைச் சேர்ந்த ‘பெரிய பட்டக்காரனின்’ ஆணைக்கு அடங்கியவர்கள். இப் பட்டக்காரன் பதவி ஒரே குடியில் தலைமுறையாக (Heriditory) வருவது. ஆனால் அரசன் என்று அவன் அழைக்கப்படுவதில்லை. அரசனுக்குரிய அங்கங்களும் அவனுக்குக் கிடையாது.

பல சிற்றூர்கள் சேர்ந்து ஒரு நாடு ஆகும். ஒவ்வொரு ஐந்து ஊர்களும் சேர்ந்து ‘ஊர்க் கவுண்டன்’ என்ற ஒருவனைத் தேர்ந்தெடுக்கும். ஒவ்வொரு ஊரிலும் வாழும்படியான ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு காரியக்காரன் உண்டு. இவனும் தேர்ந்தெடுக்கப்படுபவனே. ஏதாவது ஒரு ஊரில் சாதிச் சண்டை ஏற்பட்டால், ஊர்க் கவுண்டன் சண்டை ஏற்பட்ட ஊரிலுள்ள எல்லாக் காரியக்காரரையும் அழைத்துப் பேசித் தீர்த்து வைப்பது வழக்கம். அவ்வழக்கில் சம்பந்தப்பட்டோர் மேல் வழக் (Appeal) காட விரும்பினுல், பயில் நாட்டுப் பட்டக்காரனிடம் செல்ல வேண்டும். அப்பட்டக்காரன் அவ் வழக்குச் சம்பந்தப்பட்ட ஊரைச் சேர்ந்த ஊர்க் கவுண்டனையும், பயில் நாட்டு ஊர்க் கவுண்டனையும் கூட்டிவைத்துப் பேசித் தீர்ப்பது வழக்கம். எல்லாக் காரியக்காரர்களும், இவ்வழக்கு மன்றத்துக்கு வர வேண்டுமென்பதில்லை. ஆனால் குறைந்தது மூன்று பேராவது இருந்தால்தான் வழக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மூனூர் மலையாளிகளிடையே வழக்கு ஏற்பட்டால், அவ்விடத்தைச் சேர்ந்த ஊர்க் கவுண்டன் வழக்கின் தன்மையை வேலப்பூரிலிருக்கும் நானாட்டு அரசருக்குத் தெரிவிப்பது வழக்கம். அவ்வரசர் வழங்கும் தீர்ப்பே