பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I.02 . தமிழகத்தில் கோசர் வேற்படை விளங்க, இலைபோல் அகன்ற வேல்களை விரைந்து வடித்தளிப்பாயாக!' என இருகை ஏந்தி இரந்தும் கிற்பான். - - . . . - - பாண்டிய நாட்டை அடுத்திருந்த சேர்ணுட்டின் தென் எல்லே நாடாகிய கோட்ைடில் எறிச்சிலுர் என்ற எழில் மிக்க பேரூரில் பிறந்து, இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய குலங்கிள்ளி சேட் சென்னி, குராப்பள்ளித்துஞ்சிய பெருங் திருமாவளவன் போலும் சோழர் குலப் பேரரசர்களையும், ஏளுதி திருக்கிள்ளி, எதிை திருக்குட்டுவன் போலும் சோழர் படைத்தலைவர்களேயும் மட்டுமே பாடிப் பாராட்டும் பெருமை மிக்கவராகிய மாடலன் மதுரைக் குமரஞர் என்ற புலவர், சந்தூர் கிழான் கோயன் மாறனின் கொற்றம் கொடை ஆகிய இருபெரும் பண்புகளையும் எடுத்துப் பாராட்ட விரும்பினர்; விரும்பிய புலவர், வறுமையால் வாடித் தன் எதிர்வரும் பாணனுக்கு, கோயன் மாறனின் மாண்புகளைக் கூறி, அவனே அவன்பால் போக்கும் பொரு :ளமைதிகொண்ட பாணுற்றுப்படைச் செய்யுளால் பண் புறப் பாராட்டியுள்ளார். - 1. "நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே: இல்என மறுக்கும் சிறுமையும் இலனே; இறையுறு விழுமம் தாங்கி, அமரகத்து இரும்பு சுவைகொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்று வடிந்த யாக்கையன்; கொடைஎதிர்ந்து சர்ந்தையோனே பாண்பசிப் பகைஞன்; இன்மைதீர வேண்டின் எம்மொடு நீயும் வம்மோ முதுவாய் இரவல! யாம் தன் இரக்கும் காலைத், தான்எம் உண்ணு மருங்குல் காட்டித், தன்னுரர்க் கருங்கைக் கொல்லனே இரக்கும் - திருந்துஇலே நெடுவேல் வடித்திசின் எனவே, புறம்:180