பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五2 தமிழகத்தில் கோசர் அளிக்கும் அருமை வாய்ந்த கெல்லிமரம் ஒன்று கெடிது வளர்ந்திருக்கும் பெருமையுடையது அக் குதிரைக் குன்று. இத்துணே வளம் மிக்க காட்டை ஆண்டவரே அதியர். தமிழகத்துப் பிற மரபினர் எவர்க்கும் வாய்க்காத ஒரு பெருமை, இவ் வதியர்க்கு வாய்த்துளது. இக்கால மக்களுக் குப் பொற்காசுகளே வாரி வழங்கும் பொன்ருப் புகழ் மிக்க விளைபொருளாம் கரும்பினக் கடல் கடந்த காட்டிலிருந்து, தமிழகத்திற்கு முதன்முதலில் கொண்டுவந்த பெருமை, இவ் வதியர்குல முன்னேர்க்கே உரித்து. . அதியர்குலம், தன் மலே அருநெல்லிக்கனியை, அருங் தமிழ்ப் பெரும் புலமை மூதாட்டியாம் ஒளவைக்கு அளித்து. வள்ளல் எழுவருள் ஒருவனும் தகுதி பெற்ற பெரியோனும், மூவேந்தர்க்குப் படைத்துணை அளிக்குமளவு பேராற்றல் வாய்ந்தவரும், தமிழகத்தைத் தமதாக்கிக் கொள்ளும் கருத் தினராய்த் தமிழகத்துப் புகுந்த வடவாரியப் ப ைட ைய வென்று விரட்டிய விழுப்புகழ் உடையாரும் கடல் கோள் களாலோ அல்லது கடல்நிகர் படை கோள்களாலோ பாழுற்றுப் போகாப் பேரரண் வாய்க்கப்பெற்றவரும் ஆகிய மலேய மன்னர்களின் அரசிருக்கையாம் திருக் கோவலூரையே முற்றி அழித்து.முதுபெரும் புலவராம்பரணர் பாராட்டைப் பெற்றேனும், தன் பேராற்றலும் பெருவாழ்வும் கண்டு. தமிழகத்துப் பேரரசர்களும் சிற்றரசர்களுமாகிய அனைவரும் ஒன்று திரண்டு வந்து வளத்துக் கொண்டமையான் உயிர் துறக்கவேண்டி நேர்ந்த கிலேயினும், தகடுர் யாத்திரை என்ற பெயரால் ஒரு தமிழ்ப் பெருநூலே தோன்றுதற்கு 1. 'அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், நீரக இருக்கை ஆழி சூட்டிய . - தொன்னிலை மரபின்நின் முன்னேர். -புறம்: 99.