பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் j 5 படுவது காண்க. இந்தச் சேரரின் மகட்கொடை உறவின் சின்னமாக வஞ்சியின்கண் வேளாவிக் கோமாளிகை ஒன்றும் விளங்கிற்து எனச் சிலம்பு கூறும்." மயிலுக்குப் பொன்னடை போர்த்திய பெருமையால் வள்ளல் எழுவருள் ஒருவனுய் வைத்து மதிக்கத்தக்க வையா விக்கோப் பெரும்பேகன் பிறந்ததும் இவ்வாவியர்குடியே. வையாவிக்குளம் எனும் பெயரோடு, பழனி மலேயில் இன் றும் விளங்கும் நீர்நிலை, அம்மலையாண்ட ஆவியர் குலத்தவ ரின் அழியா நினைவுச் சின்னமாம். - 3. ஒவியர்: தென்னுர்க்காடு மாவட்டத்துத் திண்டி வனம் வட்டத்தையும், செங்கற்பட்டு மாவட்டத்து மது ராந்தக வட்டத் தென்பகுதியையும் தன்னகத்தே கொண்ட சிறுகாட்டை, மாவிலங்கை மாநகரைத் தலைநகராகக் கொண்டு, முச்சங்கம் கிலவிய முற்காலத்தே ஆண்ட அரச இனத்தவர் ஒவியராவர். வயல்களில் விகளங்து மடிந்து கிடக் கும் கெல்ல் அறுவடை புரியும் உழவர் மகளிர் தம் கூரிய அரிவாள் வாய் மழுங்கியவிடத்து, அவ்வயல்களில் விளே யாடித்திரியும் யாமையின் வளைந்த முதுகு ஒட்டையே திட் டுக் கல்லாகக்கொண்டு திட்டுமளவு வயல் வளத்தில் சிறந்த 1. பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம் பொழில் வேளாவிக்கோ மாளிகை.” -சிலம்பு நடுகல்: 196-198. 2. “கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன்,' • , . . . . -சிறுபாண்: 5.7.