பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 தமிழகத்தில் கோசர் மாவிலங்கை, கடல்படு செல்வங்களால் சிறந்து கவின் பெறும் எயிற்பட்டினம், இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த இக் காலத்தும், தன் அழியா கினேவுச் சின்னத்தை நிறுத்திக் காட்டும் கோட்டையால் சிறப்புற்ற கிடங்கில், தன்னுட்டு அரசன் பகைமிகுதிகண்டு அஞ்சினனுக, அவனுக்கு வேலாக மாறி வெற்றி அளியுங்கள் என்ற முருகன் ஆணைக்கு அடங்கி வேலாகமாறி விளக்கமுற்ற மலர்கள் மணக்கும் கேணிகளைக் கொண்டது என்ற புராணப் பெருமை வாய்ந்த உப்பு வேலூர்’, ஆழ்ந்த அகழியும், அரியகாப்பும், அந்தணர்குடி யிருப்பும் கொண்ட ஆமூர் ஆகிய பேரூர்கள் பற்பல உடை யது. ஒவியர் ஆண்ட அச் சிறுநாடு. செய்ங்கன்றி மறவாமை, சிற்றினம் சேராமை, இன் முகம் காட்டி, இன்சொல் வழங்கி, இனியவே புரியும் இனிய பண்பு அண்டி வந்தாரை ஆட்கொள்ளும் அருளுடைமை, மண்டி எதிர்ப்பாரின் மறத்தை மண்ணுக்கும் மாவீரம், தளர்ந்த படையைத் தாங்கி உரம் ஊட்டும் தாளாண்மை, 1. “நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின், புன்னே மரத்தோடு அரியக் கல்செத்து அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் நெல்லமல் புரவின் இலங்கை.” - - -புறம்: 379. ‘மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவின் பட்டினம். . . - -சிறுபாண்: 52-53. 2. திறல்வேல் துதியில் பூத்த கேணி விறல்வேல் வென்றி வேலூர்.” - — , 172-173. 3. 'அந்தணர் அருகா அருங்கடி வியன்நகர் அந்தண் கிடங்கின் அவன் ஆமூர்.” - - - - . . . . — ;, 187-188.