பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o தமிழகத்து மறவர் குலங்கள் 23 ருந்தமையால், தொண்டையர், பகைவர்களின் காவல்மிக்க பேரரண்களைப் பாழ் செய்து ஆங்கு அடங்கி வாழ் அரசர் களின் முடிமுதலாம் அரிய பெரிய அணிகளைக் கவர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதல்லது, அப் பகைவர்தம் பெரும் படைகண்டு அஞ்சி பணிந்து வந்து தரும் திறைப் பொருள் பெற்று போர்விடுத்து வீடுதிரும்ப விரும்பாப் போர்வெறி பிடித்து திரிவாராயினர்." தன்படை வலிகண்டு அஞ்சி, தன்ைேடு பகையொழித்து கட்புகொண்டு வாழ்வான் வேண்டிய அதியமான் நெடுமான் அஞ்சி விடுக்கத், தன்பால் துளதாக வந்த தமிழ்ப் பெரு மூதாட்டியார் ஒளவையார்க்குத் தன் படைக்கலச் சாலே யைத் திறத்துகாட்டி, அவர் பாராட்டைப் பெற்ற தொண்டைமான் பிறந்தது இத் தொல்பெரும் குடியே. சோழர்குலக் குரிசில் ஒருவனுக்கும் நாகநாட்டுக் குமரியாம் பிவிவளே எனும் பெண்ணினல்லாளுக்கும் பிள்ளேயாகப் பிறந்து, தொண்டைக் கொடி அணிந்து, திரைவீசும் கடல் வழியாக வந்து, காஞ்சிமா நகரில் அமர்ந்து, வேங்கட 1. 'வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்குவெள் அருவி வேங்கடம்.” -அகம்: 213. “பொருவார் - மண்எடுத்து உண்ணும் அண்ணல் யானை - வண்தேர் தொண்டையர்.” --குறுந்: 260. "பகைவர் - கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும் வென்றி அல்லது வினேஉடம் படினும் ஒன்றல் செல்லா உரவுவாள் தடக்கைக் கொண்டி உண்டித் தொண்டையோர் மருத' ‘. - - - - -பெரும்பாண், 450-54.