பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழகத்தில் கோசர் காட்டை அல்லது கடிந்து அறம் புரிந்து ஆண்ட திரைய னுக்குரிய மரபும் இக் தொண்டையர் மரபேயாம். 6. பூழியர்: செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலங்களுள் பூழி நாடும் ஒன்று. தொல்காப்பியம், கன்னுரல் முதலாம் இலக்கண நூல்களுக்கு உரை வகுத்த பேராசிரியர்கள் "பூழிநாட்டார் சிறுகுளத்தைப் பாழி என்பர்” எனக் கூறிச் செல்வது காண்க. கொங்கு காட்டைப் போலவே பூழிநாடும் கால்நடைச் செல்வத்தால் கவின்பெற்ற தாகும். கொங்கரின் கால்நடைச் செல்வம் மாடு ஒன்றேயாக, பூழியர், ஆடு, மாடு, ஆகிய இரண்டினையும் உடைமையாகக் கொண்டிருந்தனர். பூழியர் தம் உடைமைகளாகிய, சிறிய தலைகளைக் கொண்ட வெள்ளாட்டுக் கூட்டம் அணிஅணியாகச் செல்லும் அழகைப் பழந்தமிழ்ப் புலவர்கள் பார்த்துப் பார்த்து மகிழ்ந்துள்ளனர். i பூழியர் தம் ஆனிரைகளைத் தம் நாட்டின் நடுவண் நின்று நிலைபெற்றுத் திகழும் செருப்பு எனும் பெயர் பூண்ட மக்லக்காட்டு காட்டிற்குக் கொண்டு சென்று மேய விடுத்து, அம்மலைக்காட்டு, மண்ணில் கல்லோடு கலந்து காட்சி அளிக்கும் மாணிக்க மணிகளைத் தேடித் திரட்டி வருவராதலின், அப்பூழி. காட்டவரின் பொருள் வளம் கண்டு பேரரசர்களும் பொருமைப்படுவாராயினர்.” 1. ‘பூழியர், - - - - * சிறுதலே வெள்ளைத் தோடுபரந்தன்ன' -குறுந்: 163, 'பூழியர் o . . . . . . . . . . . . உருவத்துருவின் நாண்மேயல் ஆகும். -நற்: 192. 2. புல்லுடை வியன்புலம் பல்லா.புறப்பிக்: - - கல்உயர்கடத்திடைக்கதிர்மிணி பெறுஉம் . . . . . . . மிதியல் செருப்பின் பூழியர்: -பதிற்று: 21.