பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் 25。 இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை போலும் சேர நாடாண்ட பேரரசர் பலரும், பூழியர்க்குத் தலைவராகவும், காவலராகவும் இருந்து, பூழி காட்டைக் காத்து 'பூழியர் கோவே' 'பூழியர் பெருமகன்’, ‘பூழியர் மெய்ம்மறை” என்றெல்லாம் புலவர்களால் பாராட்டப் பெறுவாராயினர். இவ்வாறு, சேரரின் சிறந்த உடைமையாகக் கருதப் பட்ட, பூழிநாட்டைப் பாழிக்குரியோன் எனப் பலராலும் பாராட்டத்தக்கவனும், பெரும்படைத் துணையும், பேராற் றலும் வாய்ந்தவனுமாகிய நன்னன் என்பான் வென்று கைப்பற்றிக் கொண்டான். பூழிநாடு, சிலகாலம் அவன் உடைமையாகவே இருந்து வந்தது. அங்கிலேயில் சேரநாட்டு அரியணையில் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்ற அடலேறனயான் ஒரு வ ன் வந்து அமர்ந்தான். பூழி, நன்னன் உடைமையாக இருப்பதை அவல்ை பொறுக்க இயலவில்லை. எத்துணைப் பாடுபட்டேனும், அதை மீண்டும் சேரர்க்குரிய தாக்கத் துணிந்தான்; அதனல், நன்னன், கண்ணுர் கணுகற்கரிய காற்படையுடையான் என்பதை அறிந்தும் அவன்மீது போர் தொடுத்தான். கடம்பின் பெரு வாயில், வாகைப் பெருங்துறை முதலாம் பல போர்க்களங் களில் பலமுறை போரிட்டு, அவன் காவல் மரமாம் வாகை யையும் வீழ்த்தி, அவனேயும் கொன்று வெற்றி கொண்டு, பூழியைப் பண்டேபோல் சேரர் உடைமையாக்கிக் குடிப்புகழ் காட்டினன்.” 1. 'பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ - உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனே நிலைச்செருவி ற்ைறலை யறுத்து, அவன் பொன்படு வாகை முழுமுதல் தடிந்த களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். ‘. . . . - -பதிற்று: பதிகம்: 4.