பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் - 3.1 வயிருர உண்டு தீர்ப்பர். மழவர்தம் புலால்வெறி தான் என்னே!. தாம் விரும்பும் நாடுகளுள் புகுந்து, அவ்வங்காடுகளுக் குரிய ஆனிரைகளைக் களவாடி உயிர் வாழ்ந்த மழவர், அவ் வானிரைகள் கிடைப்பது அரிதாகிப் போய்விடுவதாலோ, அல்லது அவர்தம் இன்பவேட்கை, ஆனிரைச் செல்வம் ஒழிந்து வேறு செல்வங்கள்பாலும் சென்றுவிட்டம்ை யாலோ, காட்டையும் காற்ைறையும், மலையையும் மடுவை 'யும் கடந்து செல்லும் வழிப்போவாரை வருத்தி, அவர்கள் கொண்டு செல்லும் கைப்பொருள்களைக் கொள்ளையிட்டு உண்ணும் கொடுந்தொழிலையும் கூடாது மேற்கொண்டு வாழ்ந்தனர். ஆறலை கள்வராய் மாறிவிட்ட மழவர்கள், மரங்கள் மண்டி இருள்செறிந்திருக்கும் காட்டிடை வழிகளி லும், மலையோ என மருளத்தக்க கற்பாறைகள் மலிந்த மலையிடை வழிகளிலும், நாளொற்றிய வில்லும் அம்பும் உடையராய் வழிவருவாரை எதிர்நோக்கிக் கரந்திருக்கும் கொடுங்காட்சியினையும் பழந்தமிழ்ப் பாக்கள் படம் பிடித் துக் காட்டியுள்ளன.” - - - ஆறலைக்கும் மழவர்களின் கொடுமையை உணர்த்தும் காட்சிகளுள் ஒன்று இதோ: கூரிய அம்பேந்திய கையின் 1. வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப் பயநிரை தழிஇய கருங்கண் மழவர் அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராஅரை வேம்பின் கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப் புலவுப் புழுக்குண்ட வன்கண் அகலறை: அகம் 3.09. 2. கடுங்கண் மழவர் களவு உழ:எழுந்த நெடுங்கால் ஆசினி ஒடுங்காடு.” அகம் 91. 'கல்லா மழவர் வில் இடம் தழிஇ . . . . . . வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை: அகம் 127.