பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தமிழகத்தில் கோசர் டினைப் பெற்றுள்ளனர். அச் சேரர்க்குரிய பனந்தோடு அணியும் பேறுபெற்ருேளுகிய அதிய்மான் நெடுமான் அஞ்சி, அம்மழவர்க்கு வாழ்வளித்து, “மழவர் பெருமான்' என்ற மாண்புமிகு பெயர் மேற் கொண்டான். சேரர்க் குரிய கொல்லி மலையாண்ட கோமகளுகிய வள்ளல் பெருங் தகை வல்வில் ஒரியும், அது புரிந்து அப்புகழ் கொண் டான். சேர இனத்தவரால் பேணிப் புரக்கப்பட்ட மழவர், வேறு சிலரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் உள. பொதினி மலைக்கு உரியோனும், அம்மலையில் கோயில் கொண் டிருக்கும் குமரவேள் நிகர்க்கும் பேராண்மை யுடையவ னும் ஆகிய நெடுவேள்ஆவி என்பான், அம்மழவரை ஒட ஒடத்துரத்தி வெற்றி கொண்டுள்ளான். மற்றும், கள்வர் குலக் கோமகனும், வேழங்கள் மலிந்த வேங்கட மலைக்குரி யோனுமாகிய புல்லி என்பான், மழவர்கள் வாழும் மழ கொங்க நாட்டிற்கே சென்று, அவர்களை வென்று துரத்தி விட்டு, அவர் வாழிடத்தையே தனதாக்கிக் கொண் டான்.2 9. வடுகர் : அதியர் முதல் மழவர் ஈருகச் சொல்லப் பட்ட இனத்தவர் அனேவரும் தமிழகத்தையே தாயகமாகக் கொண்டவர்கள், தமிழ் மொழியே வழங்கியவர்கள். ஆனால், இத்தலைப்பில் கூறப்போகும் வடுகர், தமிழக மண்ணில் தோன்றியவரோ, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவரோ அல்லர். தமிழகத்தின் வடவெல்லேயாகிய வேங்கட மலைக்கு அப்பால், வேற்று மொழி வழங்கும் 1. உருவக் குதிரை மழவர் ஒட்டிய - முருகன் நற்போர் நெடுவேள் ஆவி.” அகம் 1. கேழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி.” அகம் 61.