பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமும் இயல்பும் 45 பெற்றிருந்தது என்பதுதான் மறுக்கப் பட்டதேயல்லது' அக் காமக்கற் பகுதியை அடுத்துள்ள கொங்கு காட்டில் கோசர் வாழ்ந்திருந்தனர் என்பது மறுக்கப் பட்டிலது எனக் கொள்க. ஆல்ை, கோசர், கொங்கில் கோலோச்சத் தொடங்குமுன் குடகில் வாழ்ந்திருந்தவராவர் என, அவர் கூறுவது பொருந்தாது. o செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலே அமைத்து வஞ்சி யில் கொண்டாடிய விழாவிற்கு வந்திருந்தோருள் ஒருவ ராகக் குடகக் கொங்கரும்', தங்கள் தங்கள் காட்டகத்தே மழைதொழில் என்றும் மாருதிருக்க, கண்ணகிக்கு விழ வொடு சாந்திசெய்த மன்னர்களுள் ஒருவராகக் கொங் கிளங்கோசரும்” கூறப்பட்டுள்ளனர். இவ்விரு தொடர்களை யும் சான்றுகளாகக் கொண்டு, விழாவிற்கு வந்திருந்தவ ராகக் கூறப்படும் கொங்கர், குடகிற்கு உரியவராகவும், விழாக் கொண்டாடிய கோசர், கொங்கில் வாழ்பவராகவும் கூறிய ஒருமைப் பாட்டாலும், விழாவிற்கு வந்திருந்தவரே விழாக் கொண்டாடத் தக்கவராவர் என்பதே பொருந்தும் என்பதாலும், கொங்கரையும் கோசரையும் ஒருவராகவே. மதித்து, கொங்கிளங் கோசராவர், முதலில் கொங்கில் வதிக் தவர் என்றும், பின்னர்க் குடகடல் பக்கத்து மலேகாட்டில் குடியேறியவர் என்றும் துணிந்து கூறியுள்ளார் அவர். கொங்கு நாட்டிற்கு உரியவர் கொங்கரே என்பதிலும், கொங்கு காட்டில் வாழ்பவர் கொங்கரேயாதல் வேண்டும். என்பதிலும் சிறிதும் ஐயம் இல்லை என்ருலும், கொங்கிற்கு உரியவராகிய கொங்கர் குடகடற்கரை நாட்டிற்குத் துரத் தப்பட்டனர் என்பதற்கு இறவா இலக்கியச் சான்று ஒன் |றும் இருக்கிறது. வேளிர் தலைவனும் வள்ளலுமாகிய ஆய் அண்டிரனைப் பாடிய உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் "விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்னுட்டு......அண்ணல் யான எண்ணின் கொங்கர்க் குட.