பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so தமிழகத்தில் கோசர் னர். இளமை, முதுமைபோலும் அடைபெருது, வறிதே கோசர் எனக் கூறப்பட்ட இடங்களும் பலவாம் என்ற இலக்கியச் சான்றுகள் உண்மையாலும், இளன் என்பான் மரபினராய கோசர், இளன்வழிக்கோசர், இளங்கோக் கோசர் இளமாவுக்கோசர் என அழைக்கப்பெறுதல் முறையே யல்லது. இளங்கோசர் என அழைக்கப்பெறுதல் முறையாகாது ஆதலாலும், இளங்கோசர் என்பதில் வரும் இளம் என்ற அடை, முதுமைக்கு மாருண் இளமைப் பரு வத்தைக் குறிக்க வருவதேயல்லது வேறன்று ஆதலாலும், வக்ஸ் காட்டுக் கோசத்தை ஆண்ட இளன் என்பான் வழி யினராதலின், கோசர் இளங்கோசர் எனப்பட்டனர் என்ப தும் ஏற்புடைத்தன்று. வக்ஸ் கோசர் என்ற வடமொழிப் பெயரைக் தமிழ்ப்படுத்தி வழங்க விரும்பியிருந்தால், தமிழர் அவ்விரு. சொற்களையுமே மொழிபெயர்த்து வழங்கியிருப்பர். அவ் வாறு வழங்காமல், வத்ச என்ற மொழி முதல் சொல்லே மட்டும், அதன் பொருளாகிய இளமை என மொழி பெயர்த்து, மற்ருென்றை வடசொல்லாகவே கொண்டு இளங்கோசர் என வழங்கினர் என்றல் மொழியறிவுடை யார் ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. வத்ஸ் என்பதன் மொழிபெயர்ப்பே இளம் என்பதாயின், வச்சத் தொள் ளாயிரம், தன்பாட்டுடைத் தலைவனை, வச்சக்கோ என்ரு. வது இளங்கோ-என்ருவது வழங்கியிருக்க வேண்டுமே. யல்லது இளமைப் பொருள்படும் இருமொழிச்சொற்களும் இடம்பெற வச்சத்து இளங்கோ-என வழங்கியிருத்தல்: கூடாது. இவ்விரு நிலகளேயும் எண்ணிப் பார்ப்பவர்க்கு. இளங்கோசர் என்பதில் உள்ள இளம், வத்ஸ் என்பதன் மொழிபெயர்ப்பாம், ஆகவே இளங்கோசராவர். வ்க்ஸ் கோசராவர் என்ற கொள்கை, பிழைபடுகொள்கையாகவே புலப்படும்.