பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமும் இயல்பும் 53. வர் ஆன தமிழ் வீரர் பலர் இருக்க அவருள் ஒருவரைப் பற் றிப் பாடியதே வச்சத் தொள்ளாயிரமாம். 'உன் உயிரும் என் உயிரும் ஒன்றென்பது இன்றறிந்தேன்; மன்னுடிகழ் வச்சத்தார் மன்னவா..!-உன்னுடைய பொன்னகத்து எங்கையர்தம் பொற்கை நகச்சின்னம் என்ஆகத் தே எரிகை யால்” (கண்டு என்ற வச்சத் தொள்ளாயிரப் பாட்டில், புலவர், பாட் டுடைத் தலைவனுக்கு அணித்தாக இருந்தே பாடியுள்ளமை யால், அப் பாடலேப் பெற்ற வச்சத்தார் மன்னவன், வத்து நாடு வென்று வத்தராயன் என்னும் பட்டப் பெயர்பூண்ட படைத்தலைவன் வழியில் வங்தவன் என்றே கொள்ளுதல் வேண்டும். ஆகவே, வச்சத் தொள்ளாயிரத்தைக் கொண்டு தமிழகத்துக் கோசரை வக்ஸ் நாட்டுக் கோசம்பி நகரத்த வராக்குவதும் பொருந்தாது எனக் கொள்க. கோசரின் வாழிடம் வாழ்க்கை முறை பற்றிய விளக்கங் களே முறையாகவும் முற்றவும் உணர்த்தக்கூடிய வரலாற்று மூலங்கள் கிடைத்தில ஆதலின், அவர் குறித்துச் செந்தமிழ் இலக்கியங்கள் அளிக்கும் ஒரு சில குறிப்புக்களைக் கொண்டு நோக்கினல், கோசர்க்குரிய நாடாகத் துளுநாடு கூறப்பெறு மேனும், அவர்கள் அங்கேயே நிலத்த குடியினராய் வாழ்ந் திராது. தமிழகம் எங்கும் அலேந்து திரியும் நாடோடி வாழ்க்கையினேயே மேற்கொண்டிருந்தனர் என்றே கொள் ளுதல் வேண்டும். கொண்கான காட்டு கன்னைேடு பகைகொண்டிருந்த வரலாறு புலவர் பலரால் விளங்க உரைக்கப்பட்டுள்ளது. சோளுட்டில் கிழக்குக் கடற்கரையை அடுத்துள்ள பட்டி னங்களுள், வேல் எறிந்து வேழம் வீழ்த்தவல்ல வல்லமை வாய்க்கப்பெற்ற ஆதன் எழினிக்கு உரிய செல்லுரர்க்குக் கிழக்கே உள்ள நியமத்தில் வாழ்ந்த் கோச இளைஞர்களின்