பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழகத்தில் கோசர் அவன் பெருமை மேலும் மிகுந்துவிடவே, அவன், தன்காலப் பேரரசர்களைப் போலவே தனக்கென ஒரு காவல் மரத்தை வளர்த்துத், தன் ஆற்றல் பெருமையை, தன் ஆண்மைச் சிறப்பை அனேத்துலகத்தவர்க்கும் அறிவிக்க ஆசை கொண் டான். வெற்றிவீரளுதலின். வேந்தர்களின் வெற்றியை விளங்கப்பாடும் புறப்பொருள் திணையாகிய வாகைத் திணை யின் பெயர்பூண்ட வாகைமரத்தையே காவல் மரமாக்க விரும்பினன். உடனே, தன் காட்டின் எல்லேப் புறத்தில் வரகை எனும் பெயரால் ஒரு புதிய நகரத்தையே தோற்று வித்து, அங்ககள் நடுவே வாகை மரத்தை வளர்த்தான். காவல் மரத்தைத் தம் உயிரினும் சிறந்ததாக ஒம்ப வேண்டு வது வேந்தர் தம் கடமையாதலின், வாகைமரம் வாகைமா நகர் ஆகிய இரண்டினையும் காக்கவல்லவன், சேர வேங் தர்க்கு மகள் கொடுக்கவல்ல சிறப்போடு, சேர காட்டகத்த தாய வெளியம் என்ற ஊரில் வாழ்வோராகிய வேளிர் குடி யில் வந்த ஆய்எயினனே என அறிந்து, அவனே அழைத்து, வாகையைக் கரக்கும் பொறுப்பின அவன்பால் ஒப்படைக் தான். பகைக்கும் துணிவு பெற்றவன் பிண்டன் ஒருவனே. அவனே அழித்தாயிற்று ஆற்றல்மிக்க ஆப்எயினனத்துகின வகைப் பெற்ருயிற்று: ஆகவே, இனி ஒப்பும் உயர்வும்: அற்ற உரவோன் யான் ஒருவனே என இறுமாந்திருந்தான். அங் கிலேயில், அந் நகரத்தே நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்று. அவன் அழிவித்கே வழிகோலிவிட்டது. உயர்வகைக் கணி. தரவல்ல மாமரம் ஒன்றை நன்னன் தன் அரண்மனைத். தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்தான். ஒருநாள் அம் மரத்து மாங்காய் ஒன்று காம்பற்று அணித்தாக ஒடிய அரு வியில் விழ்த்து அவ்வருவி நீரோடே மிதந்து சென்றது , அப்போது அவ்வருவியில் நீராட வந்த பெண் ஒரு த்திட் மிதந்து வரும் அம் மாங்காயைக் கண்ணுற்ருள். அக் காய்.