பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கோசரும் திதியனும் மேலேக் கடலேச் சார்ந்த, துளுநாட்டில் தம் வாழ்க்கை யைத் தொடங்கி, கீழைக்கடலைச்சேர்ந்த சோளுட்டுகியமம். பாண்டி நாட்டுக் கூடல், நடுகாட்டு மோகூர் முதலாம் இடங்கள் தோறும் தோன்றி. நாடோடி வாழ்வினர்போல் தோன்றினும், கோசர் கிலேத்த குடியினராகவும் ஒரு சில இடங்களில் வாழ்ந்திருந்தனர் என்பதற்கான இலக்கியச் சான்றுகளும் உள. காடு கெடுத்து நாடு கண்டும், நீர் எடுத்து கிலவளம் கண்டும் உழவுத் தொழில் மேற்கொண்டு உறுபயன் பெற்று வாழலாம் பெருவாழ்வின் பெருமையை உணரத் தலைப்பட்டதும், கோசர்களும் அத்தொழிலத் தலைமேற்கொண்டனர். அவ்வாறு உழவுத் தொழிலை மேற் கொண்ட கோசர்களுள் ஒரு சிலர், தம் வாழிடத்திற்கு, அணித்தாக இருந்த குறுங்காட்டு மரங்களே வெட்டிச் சாய்த்தும், கொடிகளும் செடிகளுமாய்ப் பின்னிக்கிடந்த புதர்களேக் களேந்து போக்கியும் விளேகிலமாக்கி, ஏர் பல கொண்டு இடைவிடாது உழுது உழுது பண்படுத்திய புன் செய் கிலங்களில் பயறு முதலாம் பயிர்களே வளர்த்துப் பயன்கொண்டு வாழ்ந்து வரலாயினர். இவ்வாறு உழவுத் தொழில் மேற்கொண்டு வாழ்ந்து, வந்த கோசர்களுள் சிலர், தமக்குரிய விளைபுலத்தில் பயறு