பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் திதியனும் 7 : விதைத்துக் காத்து வந்தனர்; செம்மண் நிலமாதலாலும், பெரும் புழுதி படப் பலசால் ஒட்டப் பெற்றமையாலும் பருவ மழையும் பெய்திருந்தமையாலும், பயிற்றுப் பயிர், நன்கு கிளேத்துப் படர்ந்து பச்சிலைகளால் விறைந்து பயன் தருவதாயிற்று: 'ஏரினும் கன்ருல் எரு இடுதல்; நட்டபின் நீரினும் நன்று அதன் காப்பு” என்ற உழவுத் தொழில் உண்மையை உணர்ந்திருந்த கோசர், தம்முள் முதியரானர் சிலரை அவ்விளேபுலத்திற்குக் காவலாக்கி ஆங்கேயே இருக்க :பண்ணினர். ஒரு நாள் அவ்விளேபுலத்திற்கு அணித்தாக, ஒரு பெரிய வர் தம் உடைமையாம் ஆனிரையை மேய்த்துக்கொண்டிருங் தார். அணித்தாக விளபுலம் உளது; விளைபுலம் வறிதே கிடக்காமல் பயறு விளங்து கிடக்கிறது; வயிற்றுப் பசி தீர்க்கும் வேட்கை மிகுதியால் மேய்புலம் நோக்கி விரையும் ஆனிரை, அவ்விளைபுலத்தில் பச்சைப் ட்சேலென விளங்து படர்ந்து கிடக்கும் பயற்றினேக் கண்டுவிட்டால், அதனுட் புகுந்து மேயத் தொடங்கிவிடும்; ஆகவே, அவ்வானிரை, அவ்விளைபுலத்தைக் கடந்து போகும்வரை அவற்றை விழிப் ப்ோடு கண்காணித்துச் செல்லுதல் வேண்டும் என்ற கருத் துடையராகவும், அவ்வானிரையைச் சேர்ந்த ஒரு சிலஆக்கள் அவ்விளைபுலத்துள் எவ்வாருே புகுந்து மேய்ந்துவிட்டன. ப்சுக்கூட்டத்தால் தம் பயற்றுப்பயிர் பாழுற்றுப் போன. தைப் பார்த்துவிட்டார்கள், அக்கொல்லேயைக் கரத்திருந்த கோசமுதியோர்கள்.முதுமைவிளைவால் மிக்கசினம் மூள்வது. உலக இயற்கை அதிலும் அரும்பாடுபட்டு வளர்த்த பயிர் பயன் நல்கும் தருவாயில், ஆக்கள் புகுந்து பாழ்செய்வதைக் காண நேர்ந்ததும், அவர் சினம் அளவிறந்து பெருகி. விட்டது; உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கும் உரம் மிக்க சினம் வரப்பெற்றவர் செய்வது அறியார். அந்நிலையில் தாம். செய்யும் செயலின் விகளவு அறியார். அங்கிலக்கு ஆட்பட்டு: