பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் மோகூர்ப் பழையனும் 87 முதற்கண் தேர்ந்துகொண்ட நெடுஞ்செழியன், அப்படை களைப் பணிகொண்டு சென்று, பழையன் மாறனுக்குத் துணைபுரியத் தன் படைவீரர் தொகுதியுள், எத்தொகுதி வீரர்களே அனுப்புதல் கலமாம் என்ற ஆராய்ச்சியை மேற் கொண்டான். பழையன் பிறந்தகுடி கோசர்குடி ஆதலா லும், தன்பால் உள்ள கோசர் படைக்கு அவனே தலைவ கைப் பணி புரிந்துள்ளான் ஆதலாலும், அவனுக்குத் துணை புரிய வேண்டும் என்ற விழைவும் விரைவும், தன் படை வீரர் அனைவரினும் கோசவீரர்க்கே மிகமிக அதிகமாம் ஆத லின் இக்கோசர் படையையே அனுப்புதல் வேண்டும் எனத் துணிந்தான்) உடனே கோசவீரர்கள் கூடிவாழும் ஊர்கள் தோறும், மோகூர் முற்றுகைச் செய்தியும், அவ்வரண் காக்கச் செல்லும் பாண்டியர் படையைப் பணிகொண்டு செல்லப் பாண்டிய மன்னன் ஏவற்பணியும் பறையறிந்து அறிவிக்கப் பட்டன. அவ்வளவே தங்கள் குலத்தவனும், தங்கள் படைத் தலைவனும் ஆகிய பழையனுக்கு நேர்ந்திருக்கும் இடுக்கண் அறிந்தகோசர்கள் உடனே ஒன்றுதிரண்டு வந்து, தலோக ரில் அணிவகுத்து கிற்கும் தேர்களேயும், களிறுகளையும், குதி ரைகளையும் பணிகொண்டு. பழையன்வாழ் மோகூர் கோக் கிப் புறப்பட்டு விட்டனர். போர்முரசு முழங்கப் போர்ச் சங்கு ஒலிக்க, விரைந்து, இடைநிலை நாடுகளேயெல்லாம் இமைப்பொழுதில் கடந்து, மோகூர்க்கு அணித்தாக உள்ள ஆலம்பலத்தை அடைந்துவிட்டனர். அஃது அறிந்தான் பழையன், பாய்ந்துவரும் தன் இனப்படைதன் அரண வகளத்துகிற்கும் வடவர் படையைப் புறத்தே வகளத்துப் போரிடும் அதே நேரத்தில், அரணகத்தே அடங்கியிருக்கும் தானும் தன் படையும் புறம்போந்து தாக்கித் துரத்துதல் வேண்டும்; தன் இருபடைகட்கும் இடையே அகப்பட்ட வடவர் படை அறவே அழிவுறுதல் வேண்டும் எனப் போர்