பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் மோகூர்ப் பழையனும் 91 உரிமையாக்கிச் சிறப்பிக்கச் சிங்தை கொண்டான். வடவர் படை மோகூர் வரையும் வரக்கண்ட அக் கிகழ்ச்சி, வட வெல்லேக் காவலே மேலும் வலுவாக்குதல் வேண்டும் என்ற உணர்வைப் பாண்டியனுக்கு ஊட்டவே, அவ ன், அக் கோசர்க்காம் குடியிருப்புகளே அம் மோகூர்க்கு அணித்தா கவே ஆக்கி அளித்தான்; அவ்வாறு அவன் அளிக்கக் கோசர் வாழ்ந்த கோகர்கள், ஆலம்பலம், கோசர்பாடி எனும் பெயர்களோடு, கள்ளக் குறிச்சியை அடுத்து, இன்றும் இருந்து காட்சி அளிக்கின்றன.