பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோசர்குலப் புலவர்கள் கொற்றம் மிக்க வீரர்களைக் கொண்ட கோசர்குடி, புலமை நலம் சான்ற பெருமக்களையும் பெற்றளித்துளது. தம் வீரத்தால் தமிழக வெற்றிக்கு வழிவகுத்த கோசர்கள். தம் புலமையால் பைந்தமிழ் வளர்ச்சிக்கும் பெருந்துணை புரிந்துள்ளனர். கடல் நீரில் புகுந்து களித்தாடும் கன்னியர் பறித்தளிக்கும் புலிநகக் கொன்றை, கழனியில்களைபறிக்கும் உழத்தியர் களையோடு களேயாகக் களங்தெரியும் குவளை, காவற் காட்டில் மலரும் கடிமண முல்லே ஆகிய பன்னிற மலர்களைக் கண்ணிகட்டி மகிழும் கோசர் குலச்சிருர்களே யும், வாளும், வேலும் முதலாம் பகைவர் படைக்கலங்கள் பாய்ந்து ஆக்கிய புண்வடுக்கள் பொருந்திய முகத்தினராகிக் கடுஞ்சினத்தால் கண்சிவந்து உலாவும் கோசர்குல வீரர் களையும் காணலாம், சோணுட்டுச் செல்லுார்க்கண், அக். குலத்தில் வந்த அருந்தமிழ் ஆன்ருேர் ஒருவரும் வாழ்ந்துள் ளார். நெடுங்தொகை பாடிய கல்லிசைப் புலவர்களுள் நம் செல்லூர்க் கோசனரும் ஒருவராவர். - தமிழ்நாட்டுப் பேருர் ஒன்றில், தகுதி மிக்க குடியில் வந்த ஒர் ஆண்தகை, அன்பும் அறிவும் ஒருங்கே அமைந்த தன் ஆருயிர் மனேவியையும், மனேயின் கன்கலமாம் அழகுக் திருமகனையும் மறந்து பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு திரிந்தான்: ஒருநாள், அவன். மலர்மாலே முதலியவற்ருல்