பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

99

பெயர்கள் இருக்கு வேளிரொடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.

குறுக்கையர்

வேளாளர் குலத்தைச் சேர்ந்த பழங்குடிகளுள் ஒன்று குறுக்கையர் குடியாகும். திருநாவுக்கரசர் அக்குடியைச் சேர்ந்தவர் என்பது சேக்கிழார் பாட்டால் விளங்குகின்றது. இக்குடியினர் பெயரால் அமைந்த ஊர்கள் சோழநாட்டிற் பலவாகும். அவற்றுள் மாயவரம் வட்டத்தில் அமைந்த குறுக்கை, பாடல் பெற்றுள்ளதாகும். அங்குள்ள வீரட்டானத் திறைவனை,

"சற்றுநாள் அற்ற தென்று தருமா கற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்டனாரே"

என்று போற்றினார் திருநாவுக்கரசர். இன்னும் சில குறுக்கைகள் சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ளன. திருப்பிடவூர் நாட்டுக் குறுக்கை இப்பொழுது நாட்டுக் குறுக்கையென்னும் பெயரோடு திருச்சி. நாட்டு லால்குடி வட்டத்திலுள்ளது. திருநறையூர் நாட்டுக் குறுக்கை என்று சாசனத்திற் கூறப்படுவது கொறுக்கை என்னும் பெயர் கொண்டு கும்பகோண வட்டத்தில் காணப்படுகின்றது.

முடி மன்னர் குடி

முடியுடை மன்னராய்த் தமிழ் நாட்டில் அரசு புரிந்தவர் சேர சோழ பாண்டியர் ஆவர். அன்னார் நினைப்புக்கு எட்டாத பழங்காலந் தொட்டுத் தமிழ் நாட்டை ஆண்டு வந்தார்கள்.

சோழர்

சோழர் குடி பல சிறப்புப் பெயர்களைப்