பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

ஊரும் பேரும்

கோச்சடையன்

திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்திருந்த பாண்டியன், அரிகேசரி மாறவர்மன்.அவனுக்குப் பின் அவன் மகனாகிய கோச்சடையன் அரசனாயினான்.நாற்பதாண்டுகள் அரசு வீற்றிருந்த அம்மன்னன் பல்லவனோடு போர் புரிந்து பல நாடுகளை வென்று புகழ் பெற்றான். இராமநாதபுர நாட்டிலுள்ள கோச்சடை என்னும் ஊர் அவன் பெயரை தாங்கி நிற்கின்றது.

வரகுணன்

கோச்சடைக் கோமகனுக்குப் பின்பு பட்டமெய்திய பாண்டிய மன்னருள் வீரமும் சீலமும் ஒருங்கே வாய்ந்தவன் வரகுண பாண்டியன். அவன் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு புரிந்தவன். பல்லவ மன்னர் வீறு குறைந்திருந்த அக்காலத்தில் தந்திவர்மன் என்னும் பல்லவனிட மிருந்து சோழ வரகுணன் நாட்டை அவன் கைப்பற்றி ஆண்டவன் என்பது நன்கு விளங்கு கின்றது. திருச்சிராப்பள்ளிக்கு அருகே வரகனேரி என்னும் ஊரொன்று உண்டு, வரகுணன் ஏரி என்ற பெயரே வரகனேரி யென மருவிற் றென்பர். இவ்வூர் வரகுண பாண்டியன் பெயரைத் தாங்கி நிலவுகின்றது போலும்

சேரவன் மாதேவி

வரகுண வர்மனுக்குப் பின்னே அவன் தம்பியாகிய பராந்தக பாண்டியன் பட்டம் எய்தினான். வீர நாராயணன் என்னும் விருதுப் பெயர் கொண்ட அம்மன்னன் இயற்றிய அறங்களும், நிகழ்த்திய போர்களும், பிறவும் சின்னமனூர்ச் செப்பேடுகளில் விரித்துரைக்கப்படுகின்றன. வானவன் மாதேவி என்னும் சேரகுல மங்கை அவன்