பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

ஊரும் பேரும்


“மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகச்

செய்தார் என்னும் சேக்கிழார் பாட்டால் அவர் பெற்ற வெற்றியின் சிறப்பு விளங்குவதாகும்.

மாமல்லன் என்னும் மறு பெயருடைய நரசிங்கவர்மன் தொண்டை நாட்டின் பண்டைத் துறைமுகமாகிய கடல் மல்லையைத் திருத்தினான்; கடற்கரையில் கற்கோயில்களை ஆக்கினான். அவன் காலத்தில் மல்லை நகரம் மாமல்லபுரம் என்று பெயர் பெற்றது போலும்.அது பிற்காலத்தில் மகாபலிபுரமென மருவிற்று.

பரமேஸ்வரன்

ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசு புரிந்த பரமேஸ்வரன் ஒரு சிறந்த பல்லவன். இவனே விக்ரமாதித்தன் என்னும் சாளுக்கிய வேந்தனைத் திருச்சி நாட்டுப் பல்லவபுரத்திற்கருகேயுள்ள பெருவள நல்லுர்ப் போரில் வென்று புகழ் பெற்ற வீரன். இவன் சைவ சமய சீலன் என்பதைப் பரமேஸ்வரன் என்ற பெயரே உணர்த்துவதாகும். காஞ்சிபுரத்திற்கு அண்மையிலுள்ள பரமேஸ்வர மங்கலம் என்னும் ஊர் இவன் பெயரால் விளங்குகின்றது. இம்மன்னன் கூரம் என்ற ஊரில் ஒரு சிவாலயம் எடுத்து, அதற்குப் பரமேஸ்வர மங்கலத்தை நன்கொடையாகக் கொடுத்த செய்தி கூரத்துச் செப்பேடுகளிற் கூறப்பட்டுள்ளது.

கும்பகோணத்துக்கு அண்மையில் நந்திபுரம் என்னும் பெயருடைய நகரம் ஒன்று பல்லவர் காலத்திற் சிறந்திருந்தது. திருமங்கை ஆழ்வார் அந் நகரில் அமைந்த