பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

ஊரும் பேரும்


மாதேவியின் மைந்தனாகிய உத்தம சோழன் அரசு புரிந்த காலத்தில் அவன் தேவியர்கள் அக் கோயிலுக்குப் பல சிறப்புகள் செய்தார்கள். இராஜேந்திரன் என்னும் கங்கை கொண்ட சோழன் செம்பியன் மாதேவியின் படிவத்தை அக் கோவிலில் நிறுவி, அதன் பூசைக்கு வேண்டிய நிவந்தமும் அளித்தான்.

அரிஞ்சயன்

கண்டராதித்தன் காலம் சென்ற பின்பு, அவன் தம்பியாகிய அரிஞ்சயன் எய்திச் சில காலம் அரசாண்டான். பாண்டியனோடு நிகழ்த்திய அரிஞ்சயன் போரில் அவன் உயிர் இழந்தான் என்பர்.இவ்வாறு அகால மரணமுற்ற அரிஞ்சயன் உயிர் சாந்தி பெறுமாறு பள்ளிப் படையாக இராஜராஜன் அமைத்த ஆலயம் அரிஞ்சயேச்சுரம் என்று பெயர் பெற்றது.

சுந்தர சோழன்

அரிஞ்சயனுக்குப் பின் அரசுரிமை ஏற்றான் அவன் மைந்தனாகிய சுந்தர சோழன். இவன் செங்கோல் மன்னன் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது. தென்னார்க்காட்டிலுள்ள செளந்திரிய சோழபுரம் என்னும் ஊரும், சங்கற்பட்டைச் சேர்ந்த சுந்தர சோழ வரமும் இவன் பெயர் கொண்டு விளங்குகின்றன. இம் மன்னனைப் பொன்மாளிகைத் துஞ்சிய தேவன் எனக் கல்வெட்டுக் கூறும். இவ்வாறு துஞ்சிய நிலையில் வானவன் மாதேவி என்னும் இவன் மனையாள் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். தஞ்சையில் எழுந்த இராசராசேச்சுரம்