பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

ஊரும் பேரூம்


நாட்டிலுள்ள திருக்காளத்தி, மும்முடிச் சோழபுரம் என்னும் மறுபெயர் பெற்றது. இராஜராஜன் கால முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை அவ்வூர் மும்முடிச் சோழபுரம் என வழங்கிற்று. இன்னும், மும்முடிச் சோழமங்கலம் (திருச்சி), மும்முடிக் குப்பம் (செங்கற்பட்டு), மும்முடிச் சோழகன் (தென்னார்க்காடு) முதலிய ஊர்ப் பெயர்களில் இராஜராஜனது விருதுப் பெயர் விளங்கக் காணலாம்.

இராஜராஜன்

தென்னார்க்காட்டுத் திண்டிவன வட்டத்தில் உள்ள தாதாபுரம் என்னும் ஊர் இராஜராஜபுரமேயாகும்.79 நெல்லை நாட்டிலுள்ள இராதாபுரமும் இராஜராஜபுரமே என்று சாசனம் கூறுகின்றது.80 . ஈழநாட்டுப் பாலாவி க்கரையில் இராஜராஜன் தீச்சரம் பாடல் பெற்ற திருக் கோவிலைத் தன்னகத்தேயுடைய மாதோட்டம் இராஜராஜபுர மென்னும் பெயர் பெற்றது.81

ஜயங்கொண்டான்

ஜயங்கொண்டான் என்ற விருதுப் பெயரைத் தாங்கி நின்ற நகரங்களுள் தலை சிறந்தது ஜயங்கொண்ட சோழபுரமாகும். அஃது இராஜராஜன் காலமுதல் சில நூற்றாண்டுகள் சோழ ராஜ்யத்தின் சிறந்த நகரமாக விளங் ஜயங்கொண்டான் , இப்பொழுது திருச்சி நாட்டு உடையார் பாளைய வட்டத்தில் அஃது ஒரு சிற்றுாராக இருக்கிறது.

ஜயங்கொண்ட பட்டணம் என்னும் ஊர் சிதம்பர வட்டத்தில் உள்ளது. ஜயங்கொண்டான் என்ற பெயருடைய ஊர்கள் பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் சில உண்டு. திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலை