பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

125


இராமநாதபுரத்துத் திருப்பத்தூர் வட்டத்தில் உய்யக் கொண்டான் என்ற ஊர் உள்ளது. தென் ஆர்க்காட்டு விருத்தாசல வட்டத்தில் உய்யக் கொண்ட ராவி என்பது ஓர் ஊரின் பெயர்.

உலகமாதேவி

இராஜராஜன் தேவியருள் சிறப்புற்று விளங்கியவள் உலகமாதேவி. அவள் பெயரால் அமைந்த நகரம் தென் ஆர்க்காட்டிலுள்ள உலகமாதேவிபுரம், அவ்வூர்ப் பெயர் ஒலகபுரம் எனவும், ஒலகாபுரம் உலகமாதேவி எனவும் மருவி வழங்குகின்றது. செங்கற்பட்டு நாட்டிலுள்ள மணிமங்கலம் என்னும் ஊர் உலகமாதேவி சதுர்வேதி மங்கலம் என்று சாசனங்கள் கூறும்.’ திருவையாற்றுக் கோயிலில் உள்ள உத்தர கைலாசம் என்னும் உலோகா மாதேவீச்சரம் இம்மாதேவியாற் கட்டப்பட்டதாகும்.

திரிபுவன மாதேவி

திரிபுவன மாதேவி என்பது மற்றொரு தேவியின் பெயர். இவளே இராஜேந்திரனைப் பெற்ற தாய். புதுவை நாட்டில் உள்ள திரிபுவனி என்னும் ஊர் இவள் பெயர் தாங்கி நிற்பதாகும். அவ்வூரின் பெயர் திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என்பதன் சிதைவாகத் தெரிகிறது.

சோழ மாதேவி

இன்னொரு தேவியாகிய சோழ மாதேவியின் பெயர் தாங்கி நிலவும் ஊர்கள் பலவாகும். கோவை நாட்டு உடுமலைப்பேட்டை வட்டத்தில் சோழமாதேவி என்னும் ஊர் ஒன்று உண்டு. அது முற்காலத்தில் சோழமாதேவி நல்லூர் என வழங்கிற் றென்பது சாசனங்களால்