பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

ஊரும் பேரும்


செயின்ட் தாமஸ்

கிருஸ்தவ சமய சீலராகிய செயின்ட் தாமஸ் என்பவர், கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழ் நாட்டிற் போந்து,மயிலாப்பூரில் சில காலம் தங்கியிருந்து சமய போதகம் செய்தார் என்றும், அதனால் விளைந்த குரோதத்தால் கொலை யுண்டு இறந்தார் என்றும் கர்ண பரம்பரைக் கதையொன்று உண்டு. அவர் வசித்த இடம் மயிலாப்பூரை அடுத்த சாந்தோம் என்பர். அவர் கொலையுண்ட இடம் சென்னைக்கு ஆறு மைல் தூரத்தில் அவர் பெயரால் வழங்கும் செயின்ட் தாமஸ் மலையென்றும் கூறுவர். பதினாறாம் நூற்றாண்டில் பரங்கியர் என்று தமிழ் நாட்டில் அழைக்கப்பட்ட போர்ச்சுகீசியர் அம் மலையில் வசித்தமையால் பரங்கிமலை யென்னும் பெயரும் அதற்கு அமைவதாயிற்று. நானூறு ஆண்டுகளுக்கு முன்னே அன்னார் கட்டிய தேவமாதாவின் கோவில் இன்றும் பரங்கிமலையின் உச்சியிற் காணப் படுகின்றது என்பர்.129

புலவரும் ஊர்ப்பெயரும்

சங்க இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் நூல்களில் பல புலவர்கள் இயற்றிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அன்னவருள் ஊர்ப் பெயராற் குறிக்கப் பெற்றவர் சிலர். ஊர்ப் பெயரோடு தொடர்ந்த இயற் பெயர்களாற் குறிக்கப் பெற்றவர் சிலர். அப் பெயர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த இடம் பெறுவனவாகும்.

பொதும்பிற் புலவர்

பொதும்பில் கிழார் என்பது ஒரு பழம் புலவர் பெயர். அவரும், அவர் மைந்தராகிய புலவரும் இயற்றிய