பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

குலமும் கோவும்


மாக்டானல்

சேலம் நாட்டில் மகுடஞ் சாவடி என்பது ஓர் ஊரின் பெயர். மாக்டானல் என்ற பெயருடைய படைத் மாக்டானல் தலைவன் சில காலம் பாசறை கொண்டிருந்த இடம் மாக்டானல் சாவடி என்று பெயர் பெற்றது. அதுவே மகுடம் சாவடி எனத் தமிழில் மருவி வழங்குகின்றது.

அடிக்குறிப்பு

1. சிலப்பதிகாரம், மங்கல வாழ்த்து, 19-20

2. மணிமேகலை, 24, 30-61

3. அரவம் என்பதைக் குறித்து வழங்கும் பல கொள்கைகளைக் கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் முடிவுரையில் காண்க.

4. புறநானூறு, 88, 90.

5. பாடல் பெற்ற திருமழபாடியை மழுவாடி என்று சில சாசனங்கள் குறிக்கின்றன. “மழபாடி மேய மழுவாளனார்” எனத் திருநாவுக்கரசர் பாடுதலால் மழபாடிக் கோயிலில் மழுவாடி அமர்ந்தருளும் தன்மை அறியப்படும். ஆகவே, மழபாடி என்பது ஊர்ப் பெயர் மழுவாடி என்பது அங்குள்ள நாதன் நாமம். கொள்ளிட நதி வளைந்து செல்லும் இடத்தில் அழகுற அமைந்துள்ள மழபாடிக் கோயிலைப் “புனல்வாயிற் கோயில்” என்று சாசனம் குறிக்கின்றது. 98 of 1920.

6. தொண்டைமான் இளந்திரையன் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் உண்டு. புறம், 185.

7. திரைய மங்கலம் என்ற ஊர், செங்கற்பட்டுக் காஞ்சிபுர வட்டத்தில் உள்ளது.

8. தஞ்சை நாட்டு முத்தரையரைப்பற்றி நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய சோழர் முதற்பாகம், 133, 134-ஆம் பக்கங்களிற் காண்க.