பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

ஊரும் பேரும்


10.கோலம் என்பது இலந்தை மரத்தின் பெயர், எனவே கோலக்கா இலந்தை வனம் ஆகும்.

திருஞான சம்பந்தர் பொற்றாளம் பெற்றதை வியந்து பாடியுள்ளார் சுந்தரர்.

“நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்துஅவன் பாடலுக்கு
இரங்கும் தன்மையாளனை”

- திருக்கோலக்காப் பதிகம், 8.

11.திருநெல்லிக்கா இப்பொழுது திருநெல்லிக் காவல் எனவும், திருக்கோடிகா, திருக்கோடிகாவல் எனவும் வழங்கும். மலையாள தேசத்தில் இன்றும் ஐயனாரும், நாகமும் வழிபாடு செய்யப்படும் இடங்கள் காவு என்று அழைக்கப்படுகின்றன. நாயர் இல்லந்தோறும் பாம்புக்காவு உண்டு என்பர்.

12.ஐயை என்னும் கொற்றவையின் கோட்டம் “குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும், விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை” என்று சிலப்பதிகாரம் கூறும்.காடுகாண் காதை,207-208.

13.மலையார்தம் மகளோடு மாதேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு தலையாலங் காடுதடங் கடல்சூழ் அந்தண் சாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு பலர்பாடும் பழையனுர் ஆலங் காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க விளையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடையவினை வேறா மன்றே”

-அடைவு திருத்தாண்டகம்.

14.திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அப் பதியை வணங்கச் சென்றபோது, திருக்கோயிலின் கதவு அடைக்கப் பட்டிருந்த தென்றும்,