பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

ஊரும் பேரும்


ஆலங்காடன்” எனப் பிரித்துரைத்துப் போந்தார்; திருநாவுக்கரசர் வாக்கும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது.

“பழனைப் பதியா வுடையார் தாமே
செல்லு நெறிகாட்ட வல்லார் தாமே
திருவாலங் காடுறையும் செல்வர் தாமே”

என்பது அவர் தேவாரம்.இந்நாளில் பழையனுர், திருவாலங்காட்டுக்குத் தென்கிழக்கே முக்கால் மைல் தூரத்தில் உள்ளது.

21.235 of 1906. -

22.அங்கமைந்த பனைமரங்கள் சோழ மன்னர் களால் நன்கு பாதுகாக்கப்பட்டன என்பது கல்வெட்டுகளால் தெரிகின்றது.பச்சைப் பனைகளை வெட்டுவோர் தண்டனைக்கு ஆளாவர் என்ற அரசன் ஆணை திருப்பனங்காடுடையார் ஆலயத்துக்கு முன்னுள்ள மண்டபத்தில் எழுதப்பட்டுள்ளது. 246 of 1906.

23.பங்கயம் மலரும் புறவார் காட்டுர், பைந் தண்ணாழல்கள் சூழ் புறவார் பனங்காட்டுர் முதலிய தொடர்கள் பதினொரு பாட்டிலும் வருதல் காண்க-திருப்புறவார் பனங்காட்டுர்ப் பதிகம்.

ஒவ்வொரு சித்திரைத் திங்களிலும், முதல் வார முழுமையும் காலைக் கதிரவன் ஒளி அக்கோயிலில் உள்ள மூர்த்தியின்மீது வீசும் என்பர்.

24.சுந்தரர்-திருவெண்காட்டுப் பதிகம்.

25.வேலிமலி தண்காணல் வெண்காட்டின் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறைய வன்தன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர் ஆலமிடற் றான் அடியார் என்றடர அஞ்சுவரே”

-திருஞானசம்பந்தர், திருவெண்காட்டுப் பதிகம் 7.

26.திருக்காரை யீசுரன் கோயில் என்பது திருக்காலீசுரன் கோயில் என மருவியுள்ளது. காரைக்காடு திருக்காலிக்காடு என வழங்கும்.