பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

181


என்பது அவர் திருவாக்கு. அஃது உய்யக் கொண்டான் திருமலை யென்னும் பெயர் பெற்ற பொழுது,ஈசனும் உஜ்ஜீவநாதர் என்னும் திருநாமம் பெற்றார்.அப்பெயர் இன்று உச்சி நாதர் என மருவி வழங்குகின்றது.11

காளத்தி மலை

தென் கயிலாயம் என்று கருதப்படும் திருக்காளத்தி மலை அன்புருவாய கண்ணப்பர் வழிபட்டுப் பேறு பெற்ற அரும் பெரும் பதியாகும்.12 “கன்றினொடு சென்று பிடி - நின்று விளையாடும் காளத்தி மலையைக் கண்களிப்பக் கண்ட திருஞான சம்பந்தர், அங்குக் கண்ணப்பர் திருவுருவைத் தரிசித்து ஆனந்தக் கண்ணி சொரிந்து, அவரடியில் விழுந்து போற்றிய பான்மையைத் திருத்தொண்டர் புராணம் விரித்துரைக்கின்றது.13

திருவாட் போக்கி மலை

திருச்சி நாட்டுக் குழித்தலை வட்டத்தில் உள்ளது வாட்போக்கி மலை.14 அதனை திருவாட் மாணிக்க மலை என்று சாசனம் போத்தி மலை கூறும்.” இக் காலத்தில் அஃது இரத்தினகிரியென வழங்கு கின்றது. இன்னும், அதனாசலம் சிவாயம், காகம் அணுகா மலை என்னும் பெயர்களும் அதற்குண்டு. அம்மலைக் கோயில் பண்டைத் தமிழ் வேந்தரால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட தென்பது அங்குள்ள கல்வெட்டுக்களால் விளங்கும்.

திருப்பரங்குன்றம்

முருகனுக்குரிய படை வீடுகளுள் முதலாக வைத்துப் போற்றப்படுவதும்,தேவாரப் பாமாலை பெற்றதுமாகிய திருப்பரங்குன்றம்,மதுரை யம்பதிக்கு அருகேயுள்ளது.அப்