பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

ஊரும் பேரும்


பொழுது எதிரிலி என்பதும் இராசராசனது விருதுப்பெயர் என்று தெரிகின்றது. 301,302 of 1912.

3.299 of 1912.

4.கொடுங்குன்றமாகிய பறமலை (பிரான்மலை)ப் பக்கத்தில் பாரீச்சுரம் என்ற ஊர் இருந்ததென்பது கல்வெட்டால் அறியப்படும். சாசனத் தமிழ்க்கவி சரிதம் ப.7.

5.பெரிய புராணம்-திருக்குறிப்புத் தொண்டர் புராணம்.

6.கன்றினொடு பிடிசூழ்தண் கழுக்குன்றமே-தேவாரம்.
‘எனையாண்டு கொண்டு, நின்துய் மலர்க்கழல் தந்து ...காட்டினாய் கழுங்குன்றிலே!

-திருவாசகம், திருக்கழுக்குன்றப் பதிகம்.

7.திருப்புகழ், 325.

8.“முன்னர் வீழ்ந்திடு சிகரிகா ளத்தியா மொழிவர்
பின்னர் வீழ்ந்தது திரிசிரா மலையெனும் பிறங்கல் அன்ன தின்பிற கமைந்தது கோணமா வசலம் இன்னன மூன்றையும் தக்கின. கயிலையென் றிசைப்பர்”

-செவ்வந்திப் புராணம், திருமலைச் சருக்கம்.

9.திருக்கணாமலை என்பது ஆங்கிலத்தில் Trincomalee ஆயிற்று.

10.உய்யக்கொண்டான் என்பது இராஜராஜனுடைய விருதுப் பெயர்களில் ஒன்று.

11.தேவாரத் திருமுறை : சுவாமிநாத பண்டிதர் பதிப்பு, . 365 .

12.திருக்காளத்தி, தெக்கண கயிலாயம் என்று சைவ உலகத்தில் வழங்கப் பெறும். “தென்திசையிற் கயிலையெனும் திருக்காளத்தி” என்று திருத்தொண்டர் புராணம் குறிக்கின்றது. திருஞான சம்பந்தர் புராணம், 1028.