பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187

13.“சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்
தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி விழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்”

என்றார் சேக்கிழார். திருஞானசம்பந்தர் புராணம், 1022.

14.இத்தலத்திற் கோயில் கொண்டருளும் முடித்தழும்பர் என்னும் இறைவனுக்குத் தம் வருவாயுள் பன்னிரண்டில் ஒரு பங்கை அளித்து வரும் செட்டியார் குலம் பன்னிரண்டாம் செட்டிமார் என்று வழங்கப்பெறும்.அவர்கள் விரும்பியபடி வாட்போக்கிக் கலம்பகம் என்னும் பிரபந்தம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்டது. மீ. ச. முதற்பாகம், 139,

15.186 of 1914, இம்மலைக்கோயிலை அடைவதற்குச் சாதன மாகவுள்ள படிக்கட்டு கி.பி. 1783 -இல் அமைக்கப்பட்டது. 952 படிகள் உள்ளன. 1.M.P.p. 1517.

16.திருஞான சம்பந்தர் திருக்ஷேத்திரக் கோவை, 9.

17. M. E. R., 1932-33. தென் ஆர்க்காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்தில் ஒரு நெற்குன்றம் உண்டு. அது நெற்குணம் என வழங்கும்.M.E. R., 1934-35.

18.

“அலங்கலந் திரைகொள் நேமி
அகன்கரை மருங்கின் மேரு
விலங்கலின் உயர்ந்த கந்த
மாதன வெற்புத் தன்னில்
பொலங்குவ டுச்சி மீது
பொள்ளென இவர்த லுற்றான்
கலன்கலன் கலனென்று அம்பொன்
கழலமர் கழல்கள் ஆர்ப்ப.

-கந்தபுராணம், மகேந்திர காண்டம்.

19.புலவர் புராணம், பொதிகாசலப் படலம்,44.