பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 - ஊரும் பேரும்

9. “உய்யக்கொண்டார் வளநாட்டுத் திறைமூர் நாட்டு...திருவிடைக் குளமுடையார் - 387 of 1907.

10. “வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே"

என்பது திருஞான சம்பந்தர் தேவாரம். சைவ சித்தாந்தத்தைத் தமிழ் நாட்டில் நிலைநிறுத்திய மெய்கண்ட தேவரின் தாய் தந்தையர் இம் முக்குளத்தில் நீராடி அப் பெருமானைப் பெற்றனர் என்ற வரலாறும் இதன் சீர்மையை உணர்த்துவதாகும். திருப்பெண்ணாகடத்தில் வாழ்ந்த வேளாளராய அச்சுத களப்பாளர் நெடுங்காலம் பிள்ளையின்றிக் கவலையுற்றார் என்றும், அதுபற்றி இறைவன் திருக்குறிப்பைத் தெரிந்து கொள்ளக் கருதித் தேவாரத்தில் முறைப்படி கயிறு சார்த்திப் பார்த்தபோது திருமுக்குளத்தின் பெருமையை யுணர்த்தும் திருஞான சம்பந்தர் பாட்டுக் கிடைத்ததென்றும், அவர் உடனே தம் மனைவியாரோடு திருவெண்காட்டை அடைந்து, முக்குளத்தில் நாள்தோறும் நீராடி ஆண்டவனைத் தொழுது வந்தார் என்றும், அந் நோன்பின் பயனாக மெய் கண்ட தேவர் அவர் பிள்ளையாகத் தோன்றினார் என்றும் வரலாறு கூறுகின்றது.

11. M. E. R., 1914-15. Pudukkottah Inscriptions

12. M. E. R., 1932-33.