பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும் 2O7

படுகின்றது.23 அநபாயன் என்னும் விருதுப் பெயர் தாங்கிய இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாய நல்லூர் என்ற ஊரை உண்டாக்கி, அதனை ஆலந்துறை யுடையாருக்கு அளித்தான்.

இடையாறு மருதந்துறை

பெண்ணையாற்றின் அருகேயுள்ள பதிகளுள் ஒன்று இடையாறு. அங்கு ஈசன் கோயில்கொண்ட இடம் மருதந்துறை என்று சாசனம் அறிவிக்கின்றது. ‘பெண்ணைத் தெண்ணீா், ஏற்றுமூர் எய்த மானிடையா றிடை மருதே’ என்று சுந்தரர் தேவாரத்தில் அமைந்ததும் இத் துறையே. தென்னார்க்காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்தில் இப்பொழுது இடையார் என வழங்கும் ஊரே மருதந் துறையையுடைய இடையாறாகும்.24

குரக்குத்துறை

திருச்சி நாட்டைச் சேர்ந்த முசிரிக்கு மேற்கே ஆறு மைல் தூரத்தில் குரங்குநாதன் கோயில் ஒன்று உண்டு. அக்கோயிலையுடைய ஊர் மகேந்திர மங்கலம் என்றும் அது வடகரை மழநாட்டுப் பிரமதேயம் என்றும் கல்வெட்டுக் கூறுகின்றது.25 பழமையான குரங்குநாதன் கோயில் குரக்குத்துறை யென்று பெயர் பெற்றிருந்தது. கட்டுமானத்தில் அது காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலை ஒத்திருக்கின்றது.26 இப்பொழுது அக்கோயிலுள்ள ஊர் ஸ்ரீநிவாச நல்லூர் என வழங்கும்.27

இந் நாளில் நெல்லை நாட்டில் அம்பாசமுத்திரம் என்று வழங்கப்படுகின்ற ஊர் ஆதியில் இளங்கோக்குடி என்னும் பெயர் வாய்ந்து விளங்கிற்று. சாலைத்துறை என்பது