பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும் 211


21. பழுமரம் என்னும் சொல் ஆலமரம் என்று பொருள் படுதலால், பழுவூர் என்பது ஆலமரமுடைய ஊரைக் குறித்தது போலும்! வடமூலநாதன் என்னும் சொல் ஆலந்துறை இறைவன் என்று பொருள்படும்.

22. 533 of 1921.

23. 513 of 1921.

24, 276 of 1928.

25. 594 of 1904.

26. Trichinopoly Gazetteer, Vol. I. p. 289.

27. திருச்சி நாட்டு முசிரி வட்டத்தில் உள்ளது.

28. போத்து என்பது எருது. எனவே, போத்துடையார் எருதுவாசன முடைய ஈசன். எருத்தாவுடையார் என்று அப்பெயர் மொழிபெயர்க்கப்பட்டு, எரிச்சாவுடையாரால் சிதைந்ததென்று தோன்றுகின்றது.

29. காஞ்சிபுரத்தில் அமைந்த பாடல்பெற்ற கோவில் ஒன்று ‘கச்சி நெறிக் காரைக்காடு' என்னும் பெயருடையது. அதனைப் பாடிய திருஞான சம்பந்தர் பாசுரந்தோறும் 'நெறிக் காரைக் காட்டாரே' என்று போற்றும் பான்மையைக் கருதும் பொழுது நெறியென்பது ஆலயத்தின் பெயராக இருத்தல் கூடும் எனத் தோன்றுகின்றது. காஞ்சியில் அமைந்த நெறியாதலின் கச்சிநெறி எனப்பட்டது போலும்! இப்பொழுது காரைக்காடு திருக்காலிக்காடு என்றும், திருக்கோவில் திருக்காலீஸ்வரன் கோயில் என்றும் வழங்கும்.

3O. M. E. R., 1924-25.