பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

ஊரும் பேரும்


3.இப்பாகத்தில் ஆழ்வார்கள் மூவரால் மங்களா சாசனம் செய்யப்பெற்ற இடைக்கழி என்னும் பெருமாள் கோயில் இருக்கின்றது.

4.22 of 1906.

5.“பண்டங் கறுத்ததொர் கையுடையான்
படைத்தான் தலையை
உண்டங் கறுத்ததும் ஊரொடு -
நாடவை தானறியும்” - திருக்கண்டியூர்ப் பதிகம்,3

6.418 of 1912. w

7.419 of 1912, 423 of 1912. -

8.'அட்டானம்' என்று ஒதிய எட்டுப் பதிகளையும் ஒரு திருப்பாசுரத்திலே குறித்தருளிய திருநாவுக்கரசர் விற்குடி வீரட்டத்தை விடுத்துக் கோத்திட்டைக்குடி வீரட்டத்தைக் கூறுகிறார். கோத்திட்டை பாடல் பெற்ற தலவரிசையிற் காணப் படாமையால் அது வைப்புத் தலமாகக் கருதப்படுகின்றது. அட்டானம் எட்டுக்குமேல் இல்லை என்பது அட்டான மென்றோதிய நாலிரண்டும்” என்ற திருஞான சம்பந்தர் வாக்கால் தெளிவாகும். எனவே, திருநாவுக்கரசர் அட்டானத் திருப்பாசுரத்திற் குறித்த கோத்திட்டைக்குடி விற்குடிதானோ என்பது ஆராய்தற் குரியது.

9.மலையாளத்திலும் அம்பலம் என்பது கோயிலைக் குறிக்கும். அம்பலப் புழை முதலிய ஊர்ப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.

10.ஏனைய சபைகள்: திருநெல்வேலியில் தாமிரசபை, திருக்குற்றாலத்தில் சித்திரசபை, திருவாலங்காட்டில் இரத்தின சபை,