பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

ஊரும் பேரும்


பூசி, என துள்ளங் கவர் கள்வன்” என்று ஈசன் மேனியில் விளங்கும் வெண்ணிற்றின் பெருமையை விளக்கினார் திருஞான சம்பந்தர். இத் தகைய சீர்மை வாய்ந்த மயானங்களில் மூன்று தேவாரத்திற் கூறப்பட்டுள்ளன. அவை நாலூர் மயானம், கடவூர் மயானம், கச்சி மயானம் என்பன.

“நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச் சொல்லா தவரெல்லாம் செல்லாதார் தொன்னெறிக்கே”

என்று தேவாரம் கூறுமாற்றால் நாலூர் மயானத்தின் பெருமை நன்கு விளங்கும். அம் மயானம் இப்பொழுது திருநாலூர் எனனும் ஊருககு ஒரு மைல துரத்தில் உள்ளது; திருமெய்ஞ்ஞானம் என வழங்குகின்றது.

திருக்கடவூர்-மயானம்

திருக்கடவூர் மயானம் மூவர் தேவாரமும் பெற்றது. அங்கமர்ந்த இறைவன் திருநாமம் பெருமானடிகள் என்று குறிக்கப்படுகின்றது.

“கரிய மிடறும் உடையார் கடவூர்
மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவர்எம்
பெருமான் அடிகளே”

என்று பாடினார் திருஞான சம்பந்தர்.2 அம் மயானம் திருக்கடையூர் என வழங்கும் ஊருக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது. திருமயானம் என்பது அதன் பெயர்.

கச்சி-மயானம்

காஞ்சி மாநகரில் அமைந்த சிவாலயங்களுள் கச்சி மயானமும் ஒன்றென்பது, “மைப்படிந்த கண்ணாளும்