பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

221


தானும் கச்சி மயானத்தான் என்னும் திருநாவுக்கரசர் திருப்பாசுரத்தால் விளங்கும். கொடுமை புரிந்த பண்டாசுரன் என்பவனைக் கச்சி-மயானம் காஞ்சிபுரத்தில் வேள்வித் தியில் இட்டு ஈசன் ஒழித்தார் என்றும், அன்று முதல் அவ்விடம் என்று பெயர் பெற்ற தென்றும் காஞ்சிப் புராணம் கூறுகின்றது.3

“அண்ணுதற் கரிய அன்று தொட்டிலிங்க மாகிப் புண்ணிய மயான லிங்கம் எனப்பெயர் பொலிவுற் றன்றே”

என்ற பாட்டு கச்சி மயானத்தின் வரலாற்றைக் காட்டுவதாகும்.

அடிக் குறிப்பு

1.தான்தோன்றி என்பது தமிழ்ச்சொல்; சுயம்பு என்பது வடசொல்.

2.“திருமால் பிரமன் இந்திரற்கும்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமாள் அடிகளே -சுந்தரர் தேவாரம்

3.காஞ்சிப் புராணம்: கச்சி மயானப் படலம், 19.