பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

ஊரும் பேரும்


5.மற்றொரு சோழமன்னன் காவிரியில் நீராடும்பொழுது கழன்று விழுந்த மணியாரத்தைச் சிவார்ப்பணம் செய்தலும், அது திருமஞ்சனக் குடத்திற் புகுந்து ஆனைக்காவுடையார்க்கு அணியாயிற் றென்பர். இதனை,

“தார மாகிய பொன்னித் தண்துறை யாடிவிழுந்தும்
நீரின் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென. ஆரங் கொண்ட எம்மானைக் காவுடை ஆதியை”

என்ற சுந்தரர் தேவாரத்தால் அறியலாம்.

6.“இருவரும் ஒருங்கே இறவருங் காலை
எந்தையே ஒடுக்கி ஆங்கவர்தம்
உருவம்.மீ தேற்றிக் கோடலால் காயா
ரோகணப் பெயர்அதற் குறுமால்”

-காஞ்சிப்புராணம், காயாரோகணப் படலம்,6

.