பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

243

அவ்வூர் வியாக்ரபுரி என்னும் வடமொழிப் பெயரும் பெற்றிருந்ததாகத் தெரிகின்றது.32 பில வாயிலூர் என்பதைப் புலிவாயிலூர் எனப் பிறழவுணர்ந்த காரணத்தால் அப்பெயர் அதற்கு அமைந்தது போலும்!

அடிக் குறிப்பு

1.“கோடுயர் வெங்களிற்றுத் திகழ்
கோச் செங்கணான் செய் கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில்”

-சுந்தரர் தேவாரம்

2.“ஞானச் சார்வாம் வெண்ணாவல்
உடனே கூட நலஞ் சிறக்கப்
பானற் களத்துத் தம் பெருமான்
அமருங் கோயிற் பணி சமைத்தார்”

-கோச் செங்கட் சோழர் புராணம்,13.

3.“கொன்னற் படையான் குடவாயில்தனில் மன்னும் பெருங் கோயில் மகிழ்ந்தவனே”

-திருஞான சம்பந்தர் தேவாரம்.

4.“சுருண்டவார்குழல் சடையுடைக்
குழகனை அழகமர் கீழ்வேளுர்த்
திரண்ட மாமறை யவர்தொழும்
பெருந்திருக் கோயிலெம் பெருமானை”

-திருஞான சம்பந்தர் தேவாரம்.

5.407 of 1912.

6.384 of 1913.

7.165 of 1925.

8.சிவஸ்தல மஞ்சரி, ப. 91.

9.262 of 1904.

10.I.M.P. p.47.

11. 359 of 1911.