பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

ஊரும் பேரும்

திருப்பத்தூர் திருத்தளி

பாண்டி நாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று திருப்புத்துர் ஆகும். அங்குள்ள சிவா திருப்புத்துர் லயம் திருத்தளி என்று பெயர் பெற்றது. திருத்தளி சாசனங்களிலே குறிக்கப்படுகின்ற இக் கோயிற் பெயர் தேவாரத்திலும் காணப்படும்.

“தேராரும் நெடுவீதித் திருப்புத் துரில் திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே”

என்பது திருநாவுக்கரசர் பாட்டு. எனவே, திருப்புத்துர்க் கோயிலின் பெயர் திருத்தளி என்பது தெளிவாகும்.

திருமேற்றளி

புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியான் மலையில் உள்ள கோயில் திருமேற்றளி என்னும் பெயருடையகென்ப சாசனங்களால் மேற்றுளி ரு தனபது திருமேற்ற தெரிகின்றது.

முடியூர்-ஆற்றுத்தளி

திருமுனைப்பாடி நாட்டுத் திருமுடியூர் என்ற ஊரில் அமைந்த சிவன் கோயில், ஆற்றுத்தளி என்னும் பெயர் பெற்றது. பராந்தக சதுர்வேதி மங்கலம் என இடைக்காலத்தில் வழங்கிய அவ்வூர் இப்பொழுது கிராமம் என்னும் பெயரோடு தென்னார்க்காட்டுத் திருக் கோயிலூர் வட்டத்தில் உள்ளது.

குரக்குத்தளி

குரக்குத்தளி என்னும் கோவில் கொங்கு நாட்டு வைப்புத் தலம் என்பது “கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்” என்னும் தேவாரக் குறிப்பினால் தெரிகின்றது. கொங்கு மண்டலத்தைச் சேந்த நாடுகள் இருபத்து நான்கில் குறும்பு நாடும் ஒன்றென்பர். அந்நாட்டு முகுந்தனுரில்