பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

ஊரும் பேரும்


இடம் ஆலந்துறையாகும். “வண்சக்கரம் மால் உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி” என்று தேவாரம் கூறுதலால், அவ்வூர்ப் பெயரின் காரணம் விளங்கும் என்பர்.

அடிக்குறிப்பு


1. 577 of 1904. மண்தளி இப்பொழுது சத்திய வாகேஸ்வரர் கோயில் என வழங்கும்.

2. “தலையெலாம் பறிக்கும் சமண் கையருள், நிலையினால் மறைத்தால் மறைக்கொண்ணுமோ, அலையினார் பொழில் ஆறை வடதளி” என்பது திருநாவுக்கரசர் பாசுரம். இப்பொழுது வடதளி, வள்ளலார் கோயில் என வழங்கும். பழையாறை என்ற நகரத்தினிடையே திருமலைராயன் என்னும் ஆறு செல்கின்றது. அது நானுறு ஆண்டுகளுக்கு முன்பு திருமலைராயன் பட்டினத்திலிருந்து ஆட்சி செய்த மாலைப்பாடித் திருமலைராயன் என்ற அரசனால் வெட்டுவிக்கப்பட்ட தென்பர். - மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், 2-ஆம் பாகம், 41-42.

3. 739 of 1905.

4. கொங்கு மண்டல சதகம்: ஊர்த்தொகை, அந்நாட்டிலுள்ள 32 ஊர்களில் முகுந்தை என்னும் முகுந்தனுரும் ஒன்று.

5, 305 of 1908.

6. I. M. P., 536

7. தவப்பள்ளியும் தவத்துறையும் ஒன்றெனின் இப்போது லால்குடியென வழங்கும் ஊரிலுள்ள சிவாலயமே அதுவாகும்.

8. இலங்கை நாட்டிலுள்ள கோணமலை (Trincomalee) திரிகோண மலையாகிய முறை இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். திரிசிரபுரம், புராணத்தில் திரிசிரன் என்ற இலங்கை அரக்கனோடு தொடர்புறுவதாயிற்று.