பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

255

9. “செழுந்தரளப் பொன்னி சூழ் திருநன்னிபள்ளி’ என்றும், “பானல்வாயல் திருநன்னிபள்ளி என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் இப் பதியின் செழுமையைப் பாராட்டியுள்ளார். (திருஞான சம்பந்தர் புராணம், 112, 114)

10. 559 of 1908.

11. கொல்லி முதலிய பதினாறு மலைகள் கொங்கு நாட்டில் உண்டென்று கொங்கு மண்டல சதகம் கூறும்.

-கொங்கு மண்டல சதகம்,5,26

,

12. M. E. R., 1929-30.

13. “கொல்லிக் கருங்கட்டெய்வம்” என்பது குறுந்தொகை. அறப்பளிசுரர் ஆலயம் என வழங்கும் அறைப்பள்ளிக்கு அண்மையில் கொல்லிப்பாவை உறையுமிடம் உள்ளதென்று கொல்லிமலை அகராதியில் சொல்லப்பட்டுள்ளதாம்.

-கொங்கு மண்டல சதகம், ப. 28.