பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

267


வீமீச்சுரம்

முன்னாளில் இடர்க்கரம்பை என்னும் பெயர் பெற்றிருந்த ஊரில் வீமீச்சுரம் என்ற சிவாலயம் விளங்கிற்றென்பது ஒரு சாசனப் பாட்டால் தும் தெரிகின்றது. முதற் குலோத்துங்க சோழன் காலத்ததாகக் கருதப்படும் அச்சாசனத்தில்,

"இம்பர் நிகழவிளக் கிட்டான் இடர்க்கரம்பைச் செம்பொன்ணி வீமீச் சரந்தன்னில்-உம்பர்தொழ விண்ணுய்ய நின்றாடு வானுக்கு வேலைசூழ் மண்ணுய்ய நின்றாடு வான்”

என்ற பாட்டு உள்ளது. இடர்க்கரம்பையில் செம்பொற் கோயிலாய் இலங்கிய வீமீச்சுரத்தில் அழகிய நடம் புரியும் இறைவனுக்குக் குலோத்துங்கன் திரு விளக்கு வைத்த செய்தி அதனால் அறியப்படும்.19 அம்மன்னன் ஆணை தாங்கிக் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து, வெற்றி மாலை புனைந்த கருணாகரத் தொண்டைமான் இடர்க் கரம்பைத் திருக் கோயிலுக்கு நன்கொடை வழங்கினான் என்று மற்றொரு சாசனம் தெரிவிக்கின்றது.20 இங்ஙனம் சோழ மன்னராலும், தண்டத் தலைவராலும் கொண்டாடப்பட்ட கோயில் இப்பொழுது கோதாவரி நாட்டில் திராகூடிராமம் என்ற பெயர் கொண்டுள்ள ஊரில் பீமேச்சுரர் ஆலயமாக மிளிர்கின்றது.

கேதீச்சுரம்

ஈழ நாடு எனப்படும் இலங்கையில் சிறந்த சிவாலயங்கள் சில உண்டு. அவற்றுள் மாதோட்டம் என்னும் பதியில் அமைந்த திருக் கோயில் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றதாகும். “இருங் கடற்கரையில் எழில் திகழ் மாதோட்டம்” என்று அவர் கூறுமாற்றால் அஃது