பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

269


“மூசுவண் டறைகொன்றை முருகன்
முப்போதும் செய்முடிமேல்
வாசமா மலருடையார் வர்த்தமானிச் சரத்தாரே”

என்று திருஞான சம்பந்தர் முருக நாயனாரது தொண்டின் திறத்தினைக் குறித்தருளினார்.

இன்னும், பழமையான சில ஈச்சுரங்களின் பெருமையைக் கல்வெட்டுக்களால் அறியலாகும். அவற்றுள் சில இப்பொழுது ஊர்ப் பெயர்களாகவும் வழங்கி வருகின்றன.

தொண்டீச்சுரம்

திருமுனைப்பாடி என முன்னாளில் பெயர் பெற்றிருந்த நன்னாட்டில் தேவாரம் பாடிய இருவர் பிறந்தருளினர்.

“அறந்தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்தருள உளதானால் நம்மளவோ பேருலகில் சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு”

என்னும் சேக்கிழார் திருவாக்கால் திருநாவுக்கரசரையும் சுந்தர மூர்த்தியையும் ஈன்ற பெருமை அந்நாட்டுக்குரிய தென்பது இனிது விளங்கும்.திருவெண்ணெய் நல்லூரில் தன்னை ஆட்கொண்ட இறைவனது கருணைத் திறத்தினை வியந்து திருநாவலூரிலே பாடினார் சுந்தரர்.

“நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்க முனையரையன்
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும்.ஊர் அணி நாவலூர்”

என்னும் ஆர்வ மொழிகள் அவர் திருவாக்கிலே பிறந்தன. இத்தகைய வாய்ந்த திருநாவலூரில் ஈசனார் கோயில் கொண்ட ஈச்சுரங்கள் சாசனத்திற் குறிக்கப்பெற்றுள்ளன. தொண்டீச்சுரம் என்பது ஒரு திருக்