பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

ஊரும் பேரும்


கோயிலின் பெயர். அகத்தீச்சுரம் என்பது மற்றொரு திருக்கோயில்.

தண்டீச்சுரம்

தொண்டை மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துக் கோட்டுர் நாட்டில் வெளிச்சேரி என்னும் பழமையான ஊர் உள்ளது.அவ்வூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தண்டீச்சுரம் என்பது சாசனங்களால் தண்டிச்சுரம் அறியப்படுவதாகும். கண்டராதித்தன் முதலாய சோழ மன்னர்கள் காலத்தில் தண்டீச்சுரம் சிறப்புற்று விளங்கிற்று.24

கண்டீச்சுரம்


தென்னார்க்காட்டு நெல்லிக்குப்பத்துக்கு வடமேற்கே திருக்கண்டீச்சுரம் என்னும் ஊர் உண்டு. அங்கமைந்த திருக்கோயில் மிகப் பழமையான தென்பது சாசனங்களால் விளங்கும்.அக்கோயிலின் பெயரே ஊர்ப் பெயராயிற் றென்று தோன்றுகின்றது.25

வாலீச்சுரம்

திருச்சி நாட்டில் பச்சை மலைக்கும் கொல்லி மலைக்கும் இடையே பாங்குற அமைந்த ஊர் வாலீச்சுரம் என வழங்குகின்றது.26 பெரம்பலூர் என்னும் வாலீச்சுரம் பெரும் புலியூர் வட்டத்திலுள்ள வாலி கண்டபுரத்திலும் வாலீச்சுரம் என்ற சிவாலயம் உண்டு.

அனந்தீச்சுரம்

தொண்டை நாட்டுத் தென்னேரி என்னும் திரையனேரியில் அமைந்த ஆலயத்தின் பெயர் அனந்தீச்சுரம் என்பது.27 வட ஆர்க்காட்டில் உள்ள பாதுர் என்னும் வாதவூரில் மற்றோர் அனந்தீச்சுர அனந்தீச்சுரம் விளங்கிற்று.28