பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

275


ஆர்க்காட்டுச் சீய மங்கலத்தில் மகேந்திர வர்மன் குடைந்தெடுத்த குகைக் கோயில் பல்லவேச்சுரம் என்னும் பெயர் பெற்றது.2

ராஜசிம்மேச்சுரம்

இராஜ சிம்மன் என்ற பல்லவ மன்னன் சிவனடி போற்றிய சீலன். காஞ்சிபுரத்தில் கயிலாச நாதர் கோயில் கட்டியவன் இவனே. அக்கோயில் ராஜ சிம்மேச்சுரம் என்று சாசனத்திற் குறிக்கப் படுகின்றது.3 தொண்டை நாட்டுத் திருத்தொண்டருள் ஒருவராகிய பூசலார் நாயனார் ஈசனார்க்கு மனக் கோயில் கட்டிய பொழுது இராஜ சிம்மன் அவர்க்குக் கற்கோயில் கட்டினான் என்பர்.

“காடவர்கோன் கச்சிக் கற்றளி எடுத்து முற்ற மாடெலாம் சிவனுக்காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்”

என்று திருத் தொண்டர் புராணம் கூறும் கற்றளி இதுவே போலும்!

பல்லவேச்சுரம்

மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரம் தேவாரத்திற் குறிக்கப்படவில்லை யெனினும் அங்கே சிவாலயங்கள் உண்டு என்பது திருமங்கை யாழ்வார் திருப் பாசுரத்தால் தெரிகின்றது.

“பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்விசும்பில்
கணங்கள்இயங் கும்மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்”

என்னும் பாட்டால் தலசயனம் என்ற திருமால் கோவிலுக்கு அருகே சிவன் கோயில் உள்ள தென்பது தெள்ளிதின்