பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

ஊரும் பேரும்


இன்னும், நெல்லை நாட்டிலுள்ள பிள்ளையார் குளமும், சேலம் நாட்டிலுள்ள கணபதி நல்லூரும், வட ஆர்க்காட்டிலுள்ள கணபதி மடுவும், தஞ்சை மாநகரத்தில் புதிதாகத் தோன்றியுள்ள கணபதி நகரமும் விநாயகர் பெயர் தாங்கி நிலவும் ஊர்களாகும்.

முருகன்

முருகன் வழிபாடு இந் நாட்டில் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது. தொல்காப்பியத்தில் குறிஞ்சி நிலம் அவர்க் குரியதாகக் கூறப்படும். முருகன், கந்தன், குமரன், சேயோன் முதலிய பல பெயர்களால் தமிழகம் அப்பெருமானைப் போற்றும்.

திருமுருகன்பூண்டி

கொங்கு நாட்டில் திரு முருகன் பூண்டி என்பது தேவாரப் பாமாலை பெற்ற பழம் பதி. முருகன் பெயர் தாங்கிய அவ்வூரில் ஆறலைக்கும் வடுக வேடர் பலர் இருந்தனர் என்று தேவாரம் கூறுகின்றது.9 அப் பூண்டியிலுள்ள முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார்.

சேய்நல்லூர்

சோழ நாட்டில் மண்ணியாற்றின் தென் கரையில் விளங்கும் சீர்மை வாய்ந்த சிவப் பதிகளுள் ஒன்று சேய் நல்லூர். அசுர வீரனாகிய சூரனை வென்றழிக்கப் போந்த முருகப்பெருமான் - மண்ணியாற்றங் கரையில் தங்கி ஈசனார்க்குப் பூசனை இயற்றிய காரணத்தால் அவ்விடம் சேய்நல்லூர் என்று பெயர் பெற்ற தென்பர்.10 அறுபத்து மூன்று சிவனடியார்களுள் சிறப்பாக ஆலயங்களில்